சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உத்தரவிடுவதற்கு முனையக்கூடாது என பிரதி அமைச்சர் ரஞ்சன ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (திங்கட்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அத்துடன், விக்னேஸ்வரனின் அச்சுறுத்தலுக்கு அரசாங்கம் ஒருபோதும் அடிபணியமாட்டாது எனவும் தெரிவித்தார்.
மேலும், ஒன்றரை இலட்சம் வாக்குகளையே பெற்ற ஒருவர் எவ்வாறு 6.2மில்லியன் வாக்குகளால் வெற்றிபெற்றவருக்கு உத்தரவிடமுடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்?
போரின் பின்னர் நல்லிணக்கச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஒரு அரசாங்கத்துக்கு எதிராக வடக்கின் முதலமைச்சர் செயற்பட்டுள்ளார் என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.