மஹிந்தானந்த பிணையில் விடுதலை

323 0

download-13முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கமகே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இன்றைய தினம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இவர் மீதான வழக்கு எடுத்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் வழங்குவதற்காக மஹிந்தானந்த அளுத்கமகே, கடந்த 15ம் திகதி காலை நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு சென்றிருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.