எதிர் தரப்பினர் அரசாங்கத்தை முதலில் ஏற்றுக்கொண்டால் மாத்திரமே பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரனையை கொண்டு வந்து நிறைவேற்ற முடியும். தற்போது பாராளுமன்றம் எதிர்தரப்பினரது பொழுதை கழிக்கும் ஒரு இடமாகவே காணப்படுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயகார தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு எதிர்த்தரப்பினரது ஆதரவு ஒருபோதும் தேவையில்லை எங்களுக்கு தேவையான விடயங்களை முறையாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்வோம். இடைப்பட்ட காலத்தில் மீண்டும் ஒரு ஆட்சி மாற்றம் இடம்பெறாது எனவும் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகத்தில் பாரிய குறைப்பாடுகள் காணப்பட்டன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2015 ஆம் ஆண்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியினை இடைப்பட்ட காலத்தில் நிறைவேற்றவே ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தினார். மஹிந்த தலைமையிலான இடைப்பட்ட அரசாங்கமே தொடரும் இதில் எவ்வித மாற்றமும் கிடையாது என்றார்.