உரி தாக்குதல் சம்பவம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் கேட்டுக் கொண்டுள்ளது.
காஷ்மீரின் உரி ராணுவ முகாமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 வீரர்கள் உயிரிழந்தனர். எனவே பாகிஸ்தானை பயங்கரவாத நாடு என அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் உரி தாக்குதல் சம்பவம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமரின் வெளியுறவுத்துறை ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் கூறியதாவது:-
உரி தாக்குதல் சம்பவம் குறித்து எந்த விசாரணையும் நடத்தாமல் பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம் சுமத்துகிறது. இதுகுறித்த உண்மைகளை அறிந்து கொள்ள சர்வதேச விசாரணை நடத்த வேண்டும். பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம் சுமத்துவது இது முதல்முறையல்ல. இவ்வாறு அவர் கூறினார்.