சிவனொளிபாத மலை பருவகாலம் டிசம்பர் 22ஆம் திகதி உதுவப் போயா தினத்தன்று ஆரம்பிப்பதுடன் 2019ஆம் ஆண்டு வெசாக் தினத்தன்று நிறைவடையவுள்ளது
இந்நிலையில் குறித்த நிகழ்வு தொடர்பில் இன்று சிவனொளிபாத மலைபின் பிரம பிக்கு பெங்கமுவே சிறி தம்ம தின்ன தேரர் தலைமையில் நல்லத்தண்ணி கேட்போர் கூடத்தில் விசேட கூட்டம் ஒன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது சிவனொளிபாத மலை நல்லத்தண்ணி வழியாக வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு யாத்திரிகர்களின் நலன் கருதி சுகாதார வசதிகள், போக்குவரத்து, பாதுகாப்பு,விலை கட்டுப்பாட்டு மற்றும் போதைப்பொருள் தடுப்பதைப் பற்றிய கலந்துரையாடலே இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலின் போது நுவரெலியா அரச அதிபர் ரோகன புஷ்பகுமார கூறுகையில்,லின்க் நெசுரல் மற்றும் டோரா நிறுவனங்கள் இணைந்து சிவனொளிபாத மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்படும் பிளாஸ்டிக் மற்றும் பொலுத்தீன் பொருட்களைச் சேகரித்து மலை அடிவாரத்திற்குக் கொண்டு வந்து மஸ்கெலியா பிரதேச சபையிடம் ஒப்படைக்கும் வேலைத்திட்டத்தைப் பொறுப்பேற்றுள்ளனர்
.இதற்காக இரு இயந்திரங்களின் பொறுத்தப்பவுள்ளதாகவும் இதற்கு மின்சார கட்டணம் அறவிடப்படாது என்றும் தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்வில் நுவரெலியா அரச அதிபர் ரோகன புஷ்பகுமார,அரச அதிகாரிகள், பொதுச் சுகாதார அதிகாரிகள், கிராம சேவகர்கள், வன ஜீவ அதிகாரிகள், பொலிஸார் ,படையினர், மின்சார சபை அதிகாரிகள் மற்றும் நீர் வழங்கல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.