பெரும்பான்மை உள்ளவர்களுக்கு ஆட்சியை வழங்குங்கள் – விஜேதாச ராஜபக்ஷ

449 0

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான விஜேதாச ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய சபை அமர்வை புறக்கணித்துள்ள வேளையில் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மாத்திரம் பாராளுமன்றத்தின் ஆளும் கட்சி தரப்பு ஆசனத்தில் அமர்ந்திருந்ததுடன் விசேட உரையொன்றினையும் ஆற்றினார்.

குறித்த உரையில் அரசியல் பேதங்களை மறந்து அனைவரும் பாராளுமன்ற ஜனநாயக முறையை பின்பற்ற வேண்டும் எனவும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளவர்களுக்கு ஆட்சியமைக்க அதிகாரம் வழங்க வேண்டும் எனவும் நாட்டின் நன்மை கருதி ஒரு கொள்கை உடன்பாடு ஏற்படுத்தப்பட்டு இந்த அரசியல் நெருக்கடி முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராக்கி தேர்தலில் வெற்றி பெறச் செய்ய ஐக்கிய தேசிய கட்சி பல்வேறு அர்பணிப்புக்களை மேற்கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் தற்போதைய நிலைமையில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு உடனடியாக ஒரு தீர்மானத்தை மேற்கொள்ளுமாறு அவர் சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

குறித்த உரையை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் இது தொடர்பில் தான் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு எவ்வேளையிலும் தயாராக இருப்பதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது

Leave a comment