ஹெரோயின் போதைப்பொருளை தம்மிடம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள பெண்ணொருவரை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்திய வேளையில் நீதவான் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
மாவல்ல வீதி பெதியாகொட பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ரத்னா மல்காந்தி என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவரை, மட்டக்குளிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கதிரான வத்த பகுதியில் வைத்து மேல்மாகாண மோசடி தடுப்பு பிரிவு பொலிஸாரால் நேற்று மதியம் 12 மணியளவில் கைதுசெய்திருந்தனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது 10 கிராம் 460 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் மீட்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த நபரை இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய வேளையில் நீதவான் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். அதேவேளை, சம்பவம் தொடர்பி்ல் மேலதிக விசாரணைகள் மேல்மாகாண மோசடி தடுப்பு பிரிவு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.