பாக். கலைஞர்களை அடித்து விரட்ட வேண்டும்: பா.ஜனதா எம்.எல்.ஏ. ஆவேசம்

380 0

201609271049459824_beat-pakistani-artists-and-actors-send-them-back-home-says_secvpfஇந்தியாவில் தங்கி இருக்கும் பாகிஸ்தான் கலைஞர்களை அடித்து விரட்ட வேண்டும் என்று பா.ஜனதா எம்.எல்.ஏ. ஆவேசத்துடன் கூறினார்.காஷ்மீரின் உரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 20 வீரர்கள் பலியானார்கள். இது இந்தியர்களிடையே பாகிஸ்தான் மீது கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. தீவிரவாதிகளை தூண்டிவிடும் பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் மும்பையிலும் நாட்டின் மற்ற இடங்களிலும் பாகிஸ்தான் கலைஞர்கள் தங்கியுள்ளனர். மும்பையில் பாகிஸ்தான் நடிகர் – நடிகைகள் தங்கி இந்திப் படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்கள். அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று ராஜ்தாக்கரே கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகர் கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்ட பா.ஜனதா எம்.எல்.ஏ. சங்கீத் சோம் பாகிஸ்தான் கலைஞர்களுக்கு எதிராக கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-

பாகிஸ்தான் கலைஞர்களால் அவர்களது நாட்டுக்கு எந்த பயனும் இல்லை. அவர்களுக்கு அங்கு வேலையும் இல்லை. இங்கு (இந்தியாவில்) அவர்களுக்கு வேலை கிடைக்கிறது. கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள். அவர்கள் துரோகிகள் இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறுவதை விரும்பவில்லை என்று பாகிஸ்தானுக்கு தெரிவிக்க வேண்டும்.

ஆனால் பாகிஸ்தான் நடிகர்கள் துரோகிகள் போல் நடந்து கொள்கிறார்கள். எனவே அவர்களை செருப்பால் அடித்து இந்தியாவை விட்டு துரத்த வேண்டும். மிருகங்கள் கூட எஜமானர்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்கின்றன. துரோகம் செய்ய நினைப்பதில்லை. இந்த நாட்டில் இந்தியர்கள் மட்டுமே தங்க அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.