பதவியை இராஜினாமா செய்யும் எண்ணம் தனக்கில்லை-மஹிந்த

283 0

பாராளுமன்றில் பெரும்பான்மை இல்லாத காராணத்தினால் பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு மஹிந்த ராஜபக்ஷவிடம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கோரிக்கை விடுத்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்றிரவு மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து உள் நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நெருக்கடியையும் அவப்பெயரையும் ஏற்படுத்தாது பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும் எதிர்வரும் 7ஆம் திகதி மேல் முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை பதவியை இராஜினாமா செய்யும் எண்ணம் தனக்கில்லை என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதியின் முடிவிற்கு சாதகமா தீர்ப்பு அமையுமாயின் தேர்தலுக்கு செல்வதாகவும் பாதகமாக தீர்ப்பு அமையும் பட்சத்தில் பாராளுமன்றில் 113 பெரும்பான்மையை நிரூபித்து காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

தான் பதவியிலிருப்பதால் தன்னை நாட்டு மக்கள் விமர்சிக்க மாட்டார்கள் என்றும் மைத்திரிபால சிறிசேனவையே விமர்சிப்பார்கள் என்றும் அதற்கிடையில் தன்னை பதவியிலிருந்து நீக்க வேண்டுமாயின் ஜனாதிபதியிடம் கூறுமாறும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a comment