இடைக்கால அறிக்கைக்கு அமைச்சரவை அனுமதி

329 0

புதிய அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு அறிக்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் மஹிந்த சமரசிங்க, அதனை இவ் வருட இறுதிக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதற்கான அனுதியை பெற்றுக் கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்தடன் 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டு சமர்பிக்கப்படும் வரை, எதிர்வரும் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்காக இந்த இடைக்கால கணக்கு அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கைப் படி மொத்த செலவினமாக 1735 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த இடைக்கால கணக்கு அறிக்கை நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவால் அமைச்சரவைக்கு சமர்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment