யாழ்ப்பணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு பகுதியில் இன்று அதிகாலையில் கடற்றொழிலுக்காக படகில் ஏறி செல்ல முற்பட்டபோது அலை மோதியதில் படகு ஒன்று கவிழ்ந்துள்ளது.
இதில் 37 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான திரு அருள்தாஸ் என்பவரே காயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதுக்கப்பட்டுள்ளார்.
இவரது படகிலிருந்த வலை மற்றும் கடற்றொழில் உபகரணங்கள் சுமார் இரண்டு இலட்சத்திற்க்கு மேல் சொத்து இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவருடன் கடற்றொழிலுக்கு செல்ல முற்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மைய நாட்களில் கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுவது குறிப்பிட தக்கது.