
அரச பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் மூன்று பேர் இணைந்து இந்த அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
குறித்த மனு இன்று பிரதம நீதியரசர் நளின் பெரேரா உள்ளிட்ட மூன்று நீதியரசர்கள் குழு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இலங்கை மருத்துவ சபை, சுகாதார அமைச்சு, உயர் கல்வி அமைச்சு, சட்ட மா அதிபர் உள்ளிட்ட தரப்பினர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பொன்றை அடிப்படையாக வைத்து சயிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்ற மாணவர்களை பதிவு செய்வதற்கு இலங்கை மருத்துவ சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக மனுதாரர்கள் கூறியுள்ளனர்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அந்த தீர்ப்பு அதனுடன் தொடர்புடைய மாணவர்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்டது என்றும் ஏனைய மாணவர்களை பதிவு செய்வதற்கு இலங்கை மருத்துவ சபைக்கு அதிகாரம் இல்லை என்றும் மனுதாரர்கள் கூறியுள்ளனர்.
இதன் காரணமாக சயிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்ற 81 மாணவர்களையும் பதிவு செய்வதற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.