இலங்கை மருத்துவ சபையின் புதிய தலைவராக டாக்டர் பாலித அபேகோன் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இவர் இன்று (26) முதல் எதிர்வரும் 5 வருடங்களுக்கு தலைவராக கடமையாற்றவுள்ளார்.
டாக்டர் கொல்வின் குணரத்ன பதவி விலகியதையடுத்து அவரது இடத்துக்கே டாக்டர் பாலித அபேகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.