மைத்திரி – மஹிந்த கூட்டணிக்கு எதிராக ஜனநாயக பேரணி

454 0

மைத்திரி – மஹிந்த கூட்டணியின் அரசியல் சூழ்ச்சிகளை தோற்கடிக்க எதிர்வரும் முதலாம், இரண்டாம் திகதிகளில் கொழும்பிலிருந்து கதிர்காமம் வரை ஜனநாயகத்தை பாதுகாக்கும் நோக்கில் பேரணியொன்று இடம்பெறவுள்ளது.

ஆகவே கட்சி நலன்களை புறந்தள்ளி அனைவரும் இதில் கலந்துகொள்ள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

 

அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்தரைக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

மேலும் ஜனாதிபதி நாட்டை அழிவிலிருந்து பாதுகாக்கவே பாராளுமன்ற உறுப்பினரான மஹிந்த ராஜபக்ஷவிற்கு பிரதமர் பதவியை வழங்கியதாக குறிப்பிடுகின்றார்.

ஆனால் பிரதமராக பதவியேற்றவர் அதனை மறந்து கைவிட்டிருந்த அரச சொகுசு வாழ்க்கையினை அனுபவித்து வருகின்றார். கொழும்பில்  இருந்துக் கொண்டே பாராளுமன்றத்திற்கு ஹெலிகொப்டரில் வரும் அளவிற்கு அவரது சொகுசு வாழ்க்கை காணப்படுகின்றது. இவையனைத்தும் சொற்ப காலத்திற்கு மாத்திரமே எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

Leave a comment