ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று (26) ஒன்று கூடவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரோகண லக்ஷ்மன் பியதச தெரிவித்துள்ளார்.
கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் தற்போதைய அரசியல் சூழ்நிலை சம்பந்தமாகவும் இதன்போது அவதானம் செலுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெறவுள்ள மத்திய செயற்குழுக் கூட்டத்திற்கு சமூகமளிக்குமாறு அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.