நாகர்கோவில் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வைக்கப்பட்டிருந்த இரண்டு கன்டர் ரக வாகனங்களை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கிணங்க பொலிஸ் அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே மேற்படி வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில் அவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கைப்பற்றப்பட்ட இரு வாகனங்களையும் நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.