மாத்தறை கொலை, சந்தேக நபர் நீதிமன்றில் சரண்

298 0

மாத்தறை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபராக கருதப்படும் இளைஞர் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கைகலப்பில் இளைஞர் ஒருவர் கத்திக்குத்துக்கிலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாத்தறை  ஹகொட பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய ரசித எனும் இளைஞரே மேற்படி சம்பவத்தில் கத்திக்குத்துக்கிலக்காகி வைத்தியசாலையில் அனுமிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர் ஆவார்.

இக்கொலைச் சம்பவத்தின் போது சந்தேகநபர் பயணித்ததாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிளொன்றை நேற்று மாத்தறை நகரில் கைவிடப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதனையடுத்து இன்று காலை குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment