ரூபாவின் பெறுமதியில் மீண்டும் வீழ்ச்சி

284 0

அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின்  விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்துள்னதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இலங்கை மத்திய வங்கி இன்று  வெளியிட்டுள்ள  அறிக்கையின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 181.54 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலை இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிக்கு காரணமாக அமைவதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment