மகிந்த ராஜபக்சவின் முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர்கள் படுகொலைகள் ஆள்கடத்தல்கள் போன்றவை குறித்த விசாரணைகளில் எந்த தலையீடும் இடம்பெறாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.வெளிநாட்டு செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பொலிஸார் மற்றும் நீதிமன்றத்தின் செயற்பாடுகளில் எவரும் தலையிடமுடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றங்களிதும் பொலிஸாரினதும் சுதந்திரமான செயற்பாடு உறுதிசெய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறான அரசியல் மாற்றங்கள் காரணமாக பல்வேறு வகையான கருத்துக்கள் எழக்கூடும் என தெரிவித்துள்ள சிறிசேன அவைமாறக்கூடாது என்பதே எனது கருத்து எனவும் தெரிவித்துள்ளார்.