மாத்தறை பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கைகலப்பில் இளைஞர் ஒருவர் கத்திக்குத்துக்கிலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைதுசெய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
திஹகொட பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய ரசித எனும் இளைஞரே மேற்படி சம்பவத்தில் கத்திக்குத்துக்கிலக்காகி வைத்தியசாலையில் அனுமிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர் ஆவார்.