நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு நிரந்தரமான தீர்வு ஒன்றைப் பெறுவதற்காக பொதுத் தேர்தலை நடத்தக் வலியுறுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்புவதற்காக இன்று ஹட்டனில் கையொப்பம் திரட்டும் நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தக் கையொப்பம் திரட்டும் நிகழ்வில் ஹட்டன் டிக்கோயா நகர சபை தலைவர் எஸ்.பாலச்சந்திரன், உறுப்பினர்கள், பிரதேச மக்கள், சமூக அமைப்புகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
பாராளுமன்றத்தைக் கலைத்து உடனடியாக பொது தேர்தலை நடத்தும்படியும், மக்களின் உரிமையை உறுதி செய்யுமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.