கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சபையில் நடந்துகொண்ட விதம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் மகிந்த அணிக்கு படுதோல்வியும், ரணில் தரப்புக்கு வெற்றியும் கிடைத்திருந்தது.
ஐக்கிய தேசியக் கட்சியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளதாகவும், சபாநாயகர் மற்றும் அனுர ஆகியோரே இதற்கு முக்கிய காரணம் என்றும் சமூக வலைத்தளங்களிலும் மகிந்த தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவாலும் கருத்து வெளியிடப்பட்டது.
இதை உறுதிப்படுத்தும் வகையில் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் சபாநாயகர் கரு ஜெயசூரிய உரையாற்றும் போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரன் எழுந்து சபையில் வித்தியாசமாக செயற்பட்டுள்ளார்.
இதில், உரையாற்றுவதற்கு தயாராக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவிடம் கடும் கோபத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் எழுந்து வந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அருகில் நின்றுகொண்டிருந்த லக்ஷ்மன் கிரியெல்லவிடம் சுமந்திரன் வந்து, வாக்கெடுப்பினை குரல் பதிவு மூலம் எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அதற்கு அவசியமில்லை எனவும் இலத்திரனியல் முறைமையில் வாக்கெடுப்பு நடத்த முடியும் எனவும் சபாநாயகர் தெரிவித்த நிலையில், சுமந்திரனும் அதை ஏற்றுச் சென்றார்.