ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமைக்கு எம்மை குற்றம் சாட்ட முடியாது எனத் தெரிவித்த பாராளுன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, ரவி கருணாநாயக, மங்கள சமரவீர மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவமே அதற்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டினார்.
பிதமர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தேசிய அரசாங்கம் கடந்த மூன்றரை வருட காலமாக முறையற்ற பொருளாதார கொள்கைகளை முன்னெடுத்தனர். ரூபாவின் பெறுமதியை கட்டுப்படுத்த எவ்விதமான முறையான நடவடிக்கைகளும் அதாவது மஹிந்தவின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட நிர்வாக முறைகளை கூட இவர்கள் செயற்படுத்திவில்லை.
தற்போது ஆட்சி பொறுப்பினை நாம் ஏற்றுள்ளதால் முழு குற்றத்தினையும் எம்மீது சுமத்த முடியாது. இருப்பினும் அரசாங்கம் என்ற ரீதியில் பொருளாதாரத்தை முன்னேற்றுவது எங்களது கடமை ஆகவே ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை நிலையான தன்மைக்குள் கொண்டு வர நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றார்.