இலங்கை இராணுவத்துக்கு எதிரான ஜெனீவா குற்றச்சாட்டு தொடரும்- அமெரிக்கா

532 0

இலங்கை இராணுவத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஜெனீவா யுத்தச் குற்றச்சாட்டுக்களை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற எதிர்க் கட்சித் தலைவருமான ஆர். சம்பந்தனுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவா பிரேரணைகளுக்கு அமைவாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் இலங்கை இராணுவத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய நீதிமன்றப் பொறி முறையொன்றை அமைக்க வேண்டும் என 2019.03.13 ஆம் திகதி வரை இலங்கை அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பிரேரணையை முன்வைத்த அமெரிக்கா ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து விலகினாலும், அமெரிக்காவுக்குப் பகரமான பிரித்தானியா இந்தப் பிரேரணையை செயற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புதிய அரசாங்கம் நியமிக்கப்பட்டமைக்கு எதிராக 10 நாடுகள் இணைந்து ஜெனீவாவில் பிரேரணையொன்றை முன்வைக்க தயாராகி வருவதாகவும் இன்றைய ஞாயிறு சகோதர வார இதழொன்று குறிப்பிட்டுள்ளது

Leave a comment