மலையகத்துக்கான ரயில் சேவை மீண்டும் தடைப்பட்டது

247 0

தலவாகலையிலிருந்து கொழும்பு நோக்கி பணியாளர்களை ஏற்றிசென்ற ரயில் ஹட்டன் பகுதியில் வைத்து நேற்றைய தினம் தடம்புரண்டதையடுத்து இன்று ஞாயிற்றுக் கிழமை காலை 07மணிக்கு மீண்டும் வழமைக்குத் திரும்பியது.

இதனையடுத்து இன்று காலை கொழும்பு நோக்கிப் பயணித்து கொண்டிருந்த குறித்த ரயில் இன்று காலை 08 மணியளவில் ஹட்டன் – ரொசல்ல பகுதிக்கிடையில் 67 ம் இலக்க  பகுதியில் மீண்டும் தடம் புரண்டமையால் மலையகத்திற்கான ரயில் சேவை இன்று காலையிலிருந்து தடைப்பட்டுள்ளதாக ரயில்வே காட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

தலவாக்கலையிலிருந்து கொழும்பு கோட்டையை நோக்கி ரயில் பணியாளர்களை ஏற்றிச் சென்ற ரயில் ஹட்டன் பகுதியில் தடம்புரண்டது.

குறித்த  சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு 07மணியளவில் குறித்த ரயில் தடம்புரண்டுள்ளது

ரயில்  தண்டவாளங்களை சீர்செய்யும் பணியாளர்களை ஏற்றிச் சென்ற ரயிலின் ஒரு பகுதியில் உள்ள சங்கிலி இழுபட்டு சென்றதன் காரணமாகவே குறித்த ரயிலின் ஒரு பகுதி தடம்புரண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் கொழும்பு பதுளைக்கான மலையக ரயில் சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பணியாளர்களைக் கொண்டு சீர் செய்தவுடன் மலையகத்திற்கான ரயில் சேவை மீண்டும் வழமைக்குத் திரும்புமென ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் மேலும் தெரிவித்துள்ளது

Leave a comment