அரசியல் நெருக்கடிகளை பாராளுமன்றத்தில் முற்றாக தீர்த்துக் கொள்ள ஐக்கிய தேசிய முன்னணியனர் தயார்.அதற்கு மறுப்பு தெரிவித்தால் வீதி போராட்டங்களினால் தீர்வு காண வேண்டுமென்றால் அதனையும் எதிர்கொள்ள தயார்.
சர்வாதிகாரத்தை போராட்டத்தின் ஊடாக தோற்கடித்து ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டுவோம் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க மக்கள் இனமத பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
சகல மக்களின் ஒத்துழைப்பின் மூலமே நாட்டின் தற்போதைய சர்வாதிகார நிலைமையை மாற்றியமைக்க முடியும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்தமாதம் 26 ஆம் திகதி புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை தெரிவு செய்தது தொடக்கம் இன்று வரை அரசியலமைப்பிற்கு முரணாகவே செயற்பட்டு வருகின்றார்.
ஐக்கிய தேசிய முன்னணியினர் இன்று கண்டி மாநகரத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.