“யாழ்ப்பாணம் கோப்பாயில் 512ஆவது படைத் தலைமையகம் உள்ள காணிக்கு (மாவீரர் துயிலும் இல்லம்) எதிரே உள்ள வீரசிங்கம் சிறிதரன் என்பவருடைய காணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்தி மாவீரர் நாள் நிகழ்வை நடத்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் தடை விதிக்கின்றது. ஆனால். மக்களின் உணர்வுகளிற்கு மதிப்பளித்து நினைவுகூருவதற்கு எந்ததடையையும் நீதிமன்றம் வழங்கவில்லை.என தீர்ப்பாயம் வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் கோப்பாயில் 512ஆவது படைத் தலைமையகம் உள்ள காணிக்கு (மாவீரர் துயிலும் இல்லம்) எதிரே உள்ள வீரசிங்கம் சிறிதரன் என்பவருடைய காணியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் என்பவரால் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள், இலச்சினைகள் என்பவையும் பயன்படுத்த தடை உத்தரவை மன்று வழங்கவேண்டும்” கோப்பாய் பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றல் நேற்றுமுன்தினம் வழக்குத் தாக்கல் செய்தனர்.
அந்த மனு மீதான கட்டளை இன்று மாலை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் வழங்கினார்.