ஐ.தே.க. தயார் என்றால் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க உடன் தயார்- ஸ்ரீ ல.பொ.பெ.

291 0

ஐக்கிய தேசியக் கட்சி தயாரென்றால் இடைக்கால அரசாங்கமொன்றை அமைத்து அதன் கீழ் பாராளுமன்றத் தேர்தலை நடத்த தாம் தயாராகவுள்ளதாக மஹிந்த தரப்பு அறிவித்துள்ளது.

அரசாங்கத்திலிருந்து கொண்டு தேர்தல் ஒன்றுக்குச் செல்வதுதான் ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்பார்ப்பு எனின், அதனை இடைக்கால அரசாங்கம் ஊடாக சாதித்துக் கொள்ளலாம்.

நிபந்தனைகள் இன்றி இடைக்கால அரசாங்கத்தை அமைக்க தாம் தயார் எனவும் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்தார்.

Leave a comment