மலையகத்தில் தொடரும் ஆர்ப்பாட்டங்கள்(காணொளி)

426 0

malaiyakam

ஹட்டன் சாமிமலை ஸ்டர்ஸ்பி தோட்ட தொழிற்சாலையின் முன்னால் சம்பள உயர்வை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

 
தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயபூர்வமான சம்பள உயர்வு கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி, சாமிமலை ஸ்டர்ஸ்பி தோட்ட தொழிலாளர்கள் முதலாளிமார் சம்மேளனத்திற்கு தயாரிக்கப்பட்ட மகஜர் ஒன்றை குறித்த தோட்ட அதிகாரியிடம் கையளித்து இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 
ஸ்டர்ஸ்பி தோட்ட தொழிற்சாலையின் முன் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் 500ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

 
இதன்போது பின்தள்ளப்பட்டிருக்கும் சம்பள பேச்சுவார்த்தை மற்றும் உடன்படிக்கை ஆகியவற்றை உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், இதற்கென ஒரு வார கால அவகாசத்தை தாம் தோட்ட நிர்வாகத்திற்கு வழங்குவதாகவும், தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
குறித்த கால அவகாசத்திற்கு பின் தீர்வு எட்டப்படாவிடின் உண்ணாவிரத போராட்டத்திலும், ஈடுப்படபோவதாக இதன்போது தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

 

இதேவேளை தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக மற்றும் பல போராட்டங்கள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டன.

இதனடிப்படையில் பொகவந்தலாவ மற்றும் மஸ்கெலியா லக்ஷபான ஆகிய தோட்ட பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிதக்கது.