இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்திச் செல்ல முற்பட்ட இந்தியப் பிரஜை ஒருவர் இன்று விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை கொழும்பிலிருந்து மும்பைக்குச் சென்ற விமானத்தில் புறப்படவிருந்த இந்திய வர்த்தகர் ஒருவரே அவ்வாறு கைது செய்யப்பட்டதாக சுங்கத் திணைக்கள ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அவர் தனது ஆசனவாயிலில் நான்கு தங்கக்கட்டிகளை மறைத்து எடுத்துச் செல்ல முற்பட்டுள்ளார்.
எனினும் சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் அவர் சோதனையிடப்பட்டபோது தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கக் கட்டிகள் 71 கிராம் எடை கொண்டவை என்றும் அவற்றின் சந்தைப் பெறுமதி மூன்று இலட்சத்தி ஐம்பத்தி ஐயாயிரம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.