பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் அடுத்தடுத்து நடத்திய தாக்குதல்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த துயரமான நேரத்தில், பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்கு அமெரிக்கா துணையாக இருக்கும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹீதர் நாவெர்ட் தெரிவித்தார்.
‘இந்த பிராந்தியத்தில் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிரான போரில், பாகிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா ஒத்துழைக்கும். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம். சீன தூதரகம் மீதான தாக்குதலுக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் உடனடியாக பதிலடி கொடுத்ததால், மேலும் உயிர்ப்பலி ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது’ என்றும் அவர் கூறியுள்ளார்.