மஸ்கெலியா நகரில் கடந்த பல ஆண்டுகளாக கிராம சேவையாளருக்கு நிரந்தர காரியாலயம் இல்லாமல் இருந்த நிலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடமும் இன்றுவரை திறந்து வைக்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.நிரந்தர காரியாலயம் இல்லாமையால் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் நிதியிலிருந்தும் மஸ்கெலியா வர்த்தக பிரமுகர்கள் மூலமான நிதியொதுக்கீட்டின் கீழும் அக்கட்டிடத்தை அரசாங்க இடத்தில் கிராம சேவகர் காரியாலயம்,சமுர்த்தி காரியாலயம், பொருளாதார அபிவிருத்தி காரியாலயம் மற்றும் விவசாய அபிவிருத்தி காரியாலயம் கட்டப்பட்டன.
எனினும் கட்டிட நிர்மாண பணிகள் முடிவடைந்து ஒரு வருடகாலம் முடிவடைந்த நிலையில் காரியாலயம் பாவனைக்காக திறக்கப்படமையால் மக்கள் பல்வேறு அசௌகரியத்தை முகங்கொடுத்து வருவதாக தெரிவிக்கின்றனர்.இக்கட்டிடம் திறக்காமையால் கட்டிடத்தை சுற்றியுள்ள பகுதி காடாக காட்சி அளிப்பதாகவும் இதற்கு உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கட்டிட திறப்பு விழாவை உடன் நடாத்துமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.