ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நெருங்கியிருந்து அரசாங்கத்திலும், கட்சியிலும் செயற்பட்ட துமிந்த திஸாநாயக்க புதிய அரசாங்க நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கிச் செயற்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.
இவருக்கு வழங்கப்பட்ட அமைச்சுப் பதவியைக் கூட இன்னும் பொறுப்பேற்காதிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக ஜனாதிபதியின் அறிவிப்பு வெளியாகி, பின்னர் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய பாராளுமன்றம் 14 ஆம் திகதி முதல் கூடிய ஐந்து நாட்களிலும் இவர் சபை அமர்வுகளில் கலந்துகொள்ளவில்லையெனவும் கூறப்படுகின்றது.