அரசாங்கம் சட்டவிரோதமானது எனின், நீதிமன்றம் செல்லுங்கள்- உதய கம்மம்பில

305 0

இந்த அரசாங்கம் சட்டவிரோதமானது எனின், ஏன் இதுவரை ரணில் தரப்பினர் நீதிமன்றம் செல்லாதிருக்கின்றனர் என பிவிதுரு ஹெல உறுமய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மம்பில கேள்வி எழுப்பினார்.

ஊடகங்களின் முன்னிலையில் கருத்துத் தெரிவித்துக் கொண்டும், தூதுவர்களிடம் மகஜர் கொடுத்துக் கொண்டும் இருப்பதில் எந்தவித பிரயோசனமும் இல்லை. அவ்வாறு செய்வதனால் இந்த அரசாங்கம் சட்டவிரோதமானதாக  மாட்டாது எனவும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதே சரியான நடவடிக்கை எனவும் அவர் மேலும் கூறினார்.

Leave a comment