ஜப்பானிய தெற்கு ஒகினாவ தீவு மற்றும் அதனை ஒட்டிய பிரதேசங்களில் நில அதிர்வொன்று உணரப்பட்டுள்ளன.
ஆழ்கடல் பிரதேசத்தில் சுமார் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு ரிச்டர் அளவில் 5.7 இல் பதிவாகியுள்ளது.
இது தவிர் வட பகுதியில் உள்ள ஹொக்கைடோ என்ற தீவிலும் 5.5 ரிச்டர் அளவில் பிறிதொரு நில அதிர்வு இடம்பெற்றுள்ளது.
எப்படியிருப்பினும் இந்த இரு நில அதிர்வு காரணமாக எந்தவிதமான சேதமோ அல்லது ஆழிப்பேரலையோ ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.