சீ.வி விக்னேஸ்வரனை கைது செய்ய வேண்டும் – கம்மன்பில கோரிக்கை

360 0

vigneshwaran-01வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வில் சீ.வி விக்னேஸ்வரன் கலந்து கொண்டமை, பொது சொத்து சட்டத்தின் கீழ் குற்றமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

வடக்கு முதல்வர், தமது அதிகாரத்தையும் வளங்களையும் துஸ்பிரயோகம் செய்துள்ளதாகவும் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.