பௌத்த பீட உயர் சபையின் யோசனை இன்று அமைச்சரவைக்கு- கம்மம்பில

287 0

புத்தசாசன பணிக்குழுவினால் விடுக்கப்பட்டிருந்த இடைக்கால அரசாங்க யோசனையை இன்று (21) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக புத்தசாசன அமைச்சர் உதய கம்மம்பில தெரிவித்துள்ளார்.

இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்குமாறும், விரைவாக பொதுத் தேர்தல் ஒன்றுக்கு செல்லுமாறும், அதுவரையில் பாராளுமன்ற கூட்டத் தொடர்களை ஒத்திவைக்குமாறும் பௌத்த மத பீடங்களின் உயர் சங்கம் எனத் தெரிவித்து அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டிருந்தது.

இதனையே இன்று அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தற்பொழுது நாட்டில் அரசாங்கமோ, பிரதமரோ இல்லையெனவும், பாராளுமன்றத்தில் எல்லோரும் எம்.பி.க்கள் மட்டுமே இருப்பதாகவும் தற்போதைய அரசாங்க எதிர்த் தரப்புக்கள் தொடர்ந்தும் குற்றம்சாட்டி வருகின்றன.

அரசாங்கமே இல்லாத நாட்டில் அமைச்சரவை கூடுவது சட்ட முரணானது எனவும் மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment