பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலமுள்ள ஒரு கட்சிக்கு இடைக்கால அரசாங்கத்தை அமைக்கத் தேவையில்லையென ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
புத்தசாசன பணிக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால அரசாங்க யோசனை குறித்து வினவிய போதே முன்னாள் அமைச்சரும் ஐ.தே.க.யின் பொதுச் செயலாளருமான அகிலவிராஜ் காரியவசம் இதனைக் கூறியுள்ளார்.
தமக்கு பாராளுமன்றத்தில் 122 பேரின் ஆதரவு இருக்கின்ற போது இடைக்கால அரசாங்கம் அமைக்கத் தேவையில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.