வறுமையை ஒழிப்போம் வாழவைப்போம் அமைப்பின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு தேவிபுரத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் மதிப்பளிக்கும் நிகழ்வு நேற்று (19) அமைப்பின் உத்தியோகபூர்வ காரியாலயத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்களை பாண்ட் வாத்திய இசையுடன் றேடியன் கல்லூரி சிறார்கள் வரவேற்றதுடன். அகவணக்கத்துடன் நிகழ்வுகள் நடைபெற்றன.
இங்கு கருத்து தெரிவித்த செயற்பாட்டாளர் முல்லை ஈசன் “தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசத்திலும் எம் மறவர்களையும் அவர்களின் தியாகங்களையும் பூசிக்க வேண்டிய புனித நாளான தேசிய மாவீரர்நாள் உணர்வுடன் அனுஷ்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது அருட்தந்தை எம்.நடராஜா சமூக ஆர்வலரும் மாவீரத்தியாகியின் மகனுமான எஸ்.ரி.பிரணீவ் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வின் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு தலா 5000 ரூபாய் பணமும் தென்னை மரக்கன்றும் அன்பளிப்பாக வழங்கி கௌரவிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.