பந்துலவின் தேசிய சந்தைப்படுத்தல் கொள்கை

516 0

தேசிய சந்தைப்படுத்தல் கொள்கை ஒன்றை தயாரித்து கொள்வதற்காக அமைச்சரவையில் யோசனை ஒன்றை முன்வைக்க உள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 
நாட்டிற்கு தேசிய சந்தைப்படுத்தல் கொள்கை ஒன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் நேற்று (19) இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்வைத்த கோரிக்கையை அமைச்சர் ஏற்றுக் கொண்டதாக குறித்த சங்கத்தின் தலைவர் வைத்தியர் அனுருத்த பாதெனிய தெரிவித்துள்ளார்.

Leave a comment