குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வாவின் இடமாற்றம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வாவை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
சேவை நோக்கத்திற்காக 18 ஆம் திகதி முதல் அவரை நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்கு இடமாற்றம் செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்திருந்தார்.
இவர் கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தி கொலை செய்யப்பட்டமை, லசந்த விக்கிரமதுங்க, வாஷீம் தாஜூடீன் படுகொலை, ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை உட்பட பல சம்பவங்கள் தொடர்பில் மிகத்திறமையாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புங்குடுதீவு மாணவி படுகொலை, முப்படைகளின் பிரதானி ரவீந்திர குணவர்த்தன மற்றும் நேவி சம்பத்திற்கு எதிரான முக்கிய ஆதாரங்களை திரட்டுவதிலும் நிசாந்த சில்வா முக்கிய பங்களிப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.