பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் செலவீட்டை கட்டுப்படுத்தி, நிதி அதிகாரத்திதனை பாராளுமன்றத்தின் கீழ் கொண்டுவர எதிர் தரப்பினர் முயற்சிப்பது சாத்தியமற்ற விடயமாகும் எனத் தெரிவித்துள்ள அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையினை முறையாக கொண்டு வந்து முதலில் நிறைவேற்றுங்கள் அதன் பிறகு அரச நிதி பயன்பாடு தொடர்பில் கவனம் செலுத்தலாம் எனவும் சவால் விடுத்துள்ளார்.
மேலும் பாராளுமன்றத்தினை கூட்டுங்கள் பெரும்பான்மையினை நிரூபிக்கின்றோம் என்று குறிப்பிட்டவர்கள் முதலில் பாராளுமன்றத்தின் நிலையியல் கட்டளையின் பிரகாரம் பெரும்பான்மையினை நிரூபிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்