அனைத்து மனித குலத்தையும் ஒருங்கிணைத்து, புரிந்துணர்வு, நல்லிணக்கம், சகோதரத்துவம் மற்றும் சகவாழ்வு எனும் தார்மீக கோட்பாடுகளுடன் சுமூகமான வாழ்க்கை முறையொன்றை நிலை நிறுத்துவதே எம் பெருமானார் போதிக்கும் சன்மார்க்கத்தின் அடிப்படையான விடயமாகும் என அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
இஸ்லாத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து சவால்களையும் வெற்றி கொள்ளக் கூடிய வகையில் அல் குர்ஆன் போதிக்கின்ற நெறிமுறைகளையும், நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களின் விழிகாட்டல்களையும் முழுமையாகப் பின்பற்றி உலகளாவிய முஸ்லிம் சமூகம் ஒன்றைக் கட்டியெழுப்ப முன்வருவோம் எனவும் அவர் விடுத்துள்ள நீண்ட வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.