நிவித்திகல தொலஸ்வல பாரதி தமிழ் வித்தியாலயத்தில் தரம் 6 இல் கல்வி கற்கும் மாணவன் மகேஸ்வரன் சுஜீவன் (வயது 11) நேற்று(19) தொலஸ்வல பிரதேசத்தில் கற்பாறை ஓடை ஒன்றைக் கடந்து செல்லும்போது அதில் தவறி விழுந்து உயிரிழந்தார்
மேற்படி சம்பவம் குறித்துத் தெரியவருகையில், நேற்று பாடசாலை விட்டு தமது நண்பர்களுடன் வீட்டுக்குச் சென்ற போது தொலஸ்வல கற்பாறை ஓடை ஒன்றில் தவறி விழுந்து நீரில் அடித்துச் சென்றுள்ளார். இதைக் கண்டு அவருடன் சென்ற நண்பர்கள் அப்பிரதேச மக்களிடம் கூறியதையடுத்து பிரதேச மக்கள் மேற்படி குறித்த சிறுவனை உயிரிழந்த நிலையில் நீரிலிருந்து எடுத்து வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில் மாணவனின் சடலம் தற்போது இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றன.
இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.