யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில் நேற்று முன் தினம் இரவு கழுத்து அறுக்கப்பட்டு வீதியில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளைஞரை வீதியில் சென்றவர்கள் மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
அல்லைப்பிட்டியில் உள்ள வாடி வீட்டுக்கு அண்மையில் குறித்த இளைஞன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வீதியோரம் வீழ்ந்து கிடந்துள்ளார். அதன் போது அந்த வீதியில் சென்ற முச்சக்கர வண்டிச் சாரதி அதை அவதானித்து. வீதியில் வந்த மற்றொரு முச்சக்கர வண்டிச் சாரதியும் இணைந்து அவசர நோயாளர் காவு வண்டிச் சேவைக்கு அறிவித்துள்ளனர்.
.இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற நோயாளர் காவு வண்டி மூலம் இளைஞரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
சம்பவ இடத்தில் ஒரு சோடி செருப்புக்களும் , சைக்கிள் என்பன கிடந்துள்ளன.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். சம்பவத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை.