சட்டவிரோதமான முறையில் தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட தங்க ஆபரணத் தொகையுடன் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து மூவரை கைதுசெய்துள்ளதாக சுங்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் மினுவாங்கொட, ஜாஎல மற்றும் கொழும்பு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என ஆரம்ப கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
அத்துடன் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணமானது 40 இலட்சம் பெறுமதி வாய்ந்தவை எனத் தெரிவித்துள்ள சுங்கப் பிரிவு அதிகாரிகள் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.