நாட்டு மக்கள் முன் இன்றுள்ள பிரச்சினை பிரதமர் யார் என்பது அல்லவெனவும், நாட்டை சரியான பாதையில் வழிநடாத்திச் செல்வதாகும் எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜேமுனி சொய்ஷா தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்ட சாலிகா மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
நான் பாராளுமன்றத்துக்கு 89 ஆம் ஆண்டு பிரவேசித்தேன். அன்று முதல் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வுகளில் நேற்று நடந்தது போன்ற முறைகேடான சம்பவம் ஒன்று இடம்பெற்றதில்லை. இது கவலைக்குரிய ஒன்றாகும்.
பிரதமர் யார் என்பதல்ல எம்முன்னுள்ள பிரச்சினை. நாட்டை சரியான பாதையில் வழிநடத்த முயற்சிப்பதாகும். நான் பிரதமர் எனக் கூறிக் கொள்பவரும், பிரதமராக எதிர்பார்த்துள்ளவரும் இணைந்து ஒத்துழைத்து நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்வதாகும்.
அடுத்த தேர்தலில் அதிகாரமும் பலமும் யாரிடம் இருக்கின்றது என்பதை தீர்மானித்துக் கொள்ளுங்கள். தயவு செய்து யாரும் நாட்டை வீழ்ச்சியை நோக்கி நகர்த்த வேண்டாம் எனவும் அவர் மேலும் கேட்டுள்ளார்.