முஸ்லிம் பிரதிநிதிகளின் ஆதரவுடன் பதவிக்கு வந்தபடியால் என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை!

243 0

வவுனியா பள்ளிவாசலிலுக்கு அருகே காணப்படும் சட்டவிரோத கட்டிடங்கள் இன்று காலை மீள்புனரமைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த உப தவிசாளர் நகர பிதா   தற்காலிக தடையுத்தரவினை பிறப்பித்தார்.

வவுனியா பள்ளிவாசலுக்கு அருகே வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் நகரசபைக்கு உரித்தான பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத வியாபார நிலையம் இன்றையதினம் காலை மீள்புனரமைப்பு செய்யப்பட்டது. இவ் விடயம் தொடர்பாக பொதுமக்கள் வவுனியா நகரசபை தலைவர் உட்பட பலருக்கு தகவலை தெரிவித்திருந்த போதிலும் எவருமே பல மணிநேரமாக அவ்விடத்திற்கு சமூகமளிக்கவில்லை.

குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட வவுனியா நகரசபை  நகர பிதா சு, குமாரசுவாமி பள்ளிவாசல் நிர்வாகத்தினருடன் கலந்துரையாடி எதிர்வரும் திங்கட்கிழமை (19.11) வரை புனரமைப்பு பணிகளை நிறுத்தி வைக்குமாறு தெரிவித்துடன் திங்கட்கிழமை வவுனியா நகரசபைக்கு சமூகமளிக்குமாறும் உத்தரவினை பிறப்பித்தார்.

இதையடுத்து நகரசபை தவிசாளரைச்சந்தித்த இளைஞர் குழுவினரிடம் என்னை பதவிக்கு கொண்டு வருவதில் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் முன்னின்றுள்ளனர்.

இந்நிலையில் அவர்களுக்காக இந்த விடயத்தில் என்னால் தலையிட முடியவில்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு வவுனியாவில் பல சட்டவிரோத கட்டிடங்கள் காணப்படுகின்றன.

இவ்வாறான நிலைக்கு காரணம் வவுனியா நகரசபையின் அசமந்தபோக்கே காரணமாகும்.

Leave a comment