ஜூன் மாதத்திற்கு முன்னர் பொதுத் தேர்தல் – ரணில்

288 0

எதிர்வரும் வருடம் ஜூன்  மாதத்திற்கு முன்னர் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவது தொடர்பான யோசனையொன்றை நிறைவேற்றிக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகங்களின் ஊடகவியலாளர்களை அலரிமாளிகையில் வைத்து சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதேவேளை நேற்று பாராளுமன்றில் இடம்பெற்ற சம்பவத்திற்கு கவலையடைவதாக தெரிவித்துள்ள அவர், ஜனாதிபதிக்கு சபாநாயகர் அனுப்பிவைத்துள்ள கடிதத்திற்கு விரைவான பதிலை எதிர்பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment