தேசிய பால் பண்ணையாளர்கள் மாநாட்டில் ஜனாதிபதி!

287 0

தேசிய பால் பண்ணையாளர்களை வலுவூட்டும் இலங்கையின் முதலாவது தேசிய பால் பண்ணையாளர் மாநாடு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  தலைமையில் நேற்று  பிற்பகல் நாரஹேன்பிட்டி ஷாலிகா விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

மில்கோ பால் பண்ணையாளர் சமூக பாதுகாப்பு நிதியத்தின் நன்மைகள் மற்றும் பால் பண்ணையாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்கள் ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்பட்டன. நச்சுத்தன்மையற்ற பால் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மில்கோ நிறுவனத்தின் புதிய உற்பத்தி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டதுடன், அதன் முதலாவது உற்பத்தி ஜனாதிபதிக்கு  வழங்கி வைக்கப்பட்டது.

புதிய உற்பத்தியை ஜனாதிபதி, கொள்வனவு செய்து விற்பனை பிரதிநிதிகளுக்கான உரிமைப் பத்திரங்களை வழங்கி வைத்தார். தேசிய பால் பண்ணையாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதிக்கு விசேட நினைவுச் சின்னம் ஒன்று வழங்கிவைக்கப்பட்டது.

மீன்பிடி நீர்வள அபிவிருத்தி கிராமிய பொருளாதார அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா, மேல் மாகாண அமைச்சர் காமினி திலக்கசிறி, வடமேல் மாகாண முன்னாள் அமைச்சர் சுமல் திசேரா, மீன்பிடி நீர்வள அபிவிருத்தி கிராமிய பொருளாதார அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்ன, மில்கோ நிறுவனத்தின் தலைவர் சுல்பிகார் காதர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a comment